விஜயின் அடுத்த படத்தை இயக்கும் மகிழ் திருமேனி!

vijay m.thirumeni
vijay m.thirumeni

பிகில் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து விஜய் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்து வருகின்ற இந்நிலையில், அருண் விஜயின் தடம் படத்தை இயக்கிய மகிழ் திருமேணி இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்காக விஜயிடம் படத்திற்கான கதையை தெரிவித்து ஒப்புதல் வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

விஜய் தற்போது நடித்து வரும் ‘தளபதி 64’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. 65வது படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.