போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் வலிமை படத்தில் நடிக்கவுள்ளார். படக்குழு டிசம்பர் மாதம் முதல் படப்பிடிப்பை தொடங்க உள்ளது
டெல்லியில் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்று தகவல் வெளியாகி இருந்த நிலையில், படத்தினை 2020ஆம் ஆண்டு, தீபாவளி தினத்தன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே சமயம், உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன்-2 படமும் தீபாவளியை குறிவைத்தே தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி பேட்ட படத்துடன் அஜித் நடித்த விஸ்வாசம் படம் வெளியாகி வெற்றி பெற்றிருந்த நிலையில் தற்போது தற்போது கமல்ஹாசனுடன் மோது வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.