புத்தாண்டில் ஷொப்பிங் செல்லும் முன் இதை கவனியுங்கள்

9HKap72h5ohWiuOf IMG 1955
9HKap72h5ohWiuOf IMG 1955

யாருக்கு தான் ஷொப்பிங் செய்ய பிடிக்காது? தாங்கள் விரும்பும் பொருளை வாங்குவதில் எல்லாருக்குமே ஒரு அலாதி பிரியம் இருக்கத் தான் செய்யும்.

ஒரு பொருளை வாங்க முடிவெடுத்தால் அதன் வெளித்தோற்றத்தை மட்டும் பார்க்காமல் அதன் தரத்தையும், அது எவ்வளவு காலம் நமக்கு உபயோகப்படும் என்பதையெல்லாம் அலசிய பின் தான் அப்பொருளை வாங்க வேண்டும்.

எந்த பொருள் வாங்கினாலும் அதற்கான ரசீது (பில்) கட்டாயம் வாங்க வேண்டும். ஏனென்றால் நாம் வாங்கிய பொருள் பழுதடையும் சமயத்தில் அது பயன்படும்.

அதுமட்டுமின்றி நாம் வாங்கும் பொருளின் மீது போடப்படும் வரிப்பணமானது அரசாங்கத்திற்கு சரியாக போய் சேரவும் நாம் வாங்கும் ரசீது பயன்படுகிறது.

ஒரு பொருளை வாங்குகையில் அதற்கான உத்தரவாத அட்டைகள் இருந்தால் நிச்சயம் வாங்க வேண்டும்.

இது நாம் வாங்கிய பொருள் பிடிக்கவில்லை என்றாலோ, பழுதடைந்திருந்தாலோ அதை மாற்றவோ, இலவசமாக சரி செய்யவோ உபயோகப்படும்.

ஒரு பொருள் வாங்கினால், இன்னொரு பொருள் இலவசம் என்று கூறப்படும் பக்கமே முடிந்த வரை போகாதீர்கள்.

இதில் தரப்படுவது முக்கால்வாசி தரமான பொருளாக இருக்காது. எல்லா பொருளிலும் அதன் உற்பத்தியான திகதி, காலாவதியாகும் திகதியை சரி பார்ப்பது அவசியமான ஒன்றாகும்.

குறிப்பாக குழந்தைகளுக்கு சிறு சிறு வடிவிலான விளையாட்டு பொருட்களை வாங்காதீர்கள், அதை அவங்க வாய்ல போட்டு முழுங்க வாய்ப்பு இருக்கு.

அதே போல குறைவான விலையில் கிடைக்குதேன்னு ரோட்டில் விற்கும் பொருளை வாங்க வேண்டாம். அதெல்லாம் தரமில்லாமல் இருப்பதுடன் சில நேரம் ஆபத்துக்களையும் ஏற்ப்படுத்தும்.

அதே போல எளிதில் நெருப்பு பற்றிக் கொள்ளும் விஷயங்களால் ஆன பொருட்களை தவிருங்கள்.

மிக முக்கியாக ஒன்லைன் ஷொப்பிங் செய்யும் போது, நம்பிக்கையான, பிரபலமான இணையதள ஒன்லைன் நிறுவனமா என்பதை உறுதி செய்ய வேண்டும்.