சரும நோய்களை குணப்படுத்தும் கற்றாழை!

202001071044302866 aloe vera for skin SECVPF
202001071044302866 aloe vera for skin SECVPF

சோற்றுக்கற்றாழை பல மருத்துவக்குணங்களை கொண்டு அழகு பொருட்கள் தயாரிப்பிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நம்முடைய சருமத்தை பாதுகாக்கும் ஒரு அற்புதமான இயற்கை பொருள் இது.

தலைமுடி வளர்ச்சி குறைவாக உள்ளவர்கள் சோற்று கற்றாழை மடலை நீக்கி, சாறெடுத்து அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 45 நாட்கள் வெயிலில் காய வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வந்தால் தலைமுடி நன்கு செழித்து வளரும்.

கற்றாழையில் உள்ள சாற்றை சுத்தமான நீரில் கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உங்கள் இளமை நீண்ட நாள் நிலைக்கும்.

சிலருக்கு முகம் வறண்டு வயதான தோற்றம் போல் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் கற்றாழை சாற்றை முகத்தில் தேய்த்து கழுவி வந்தால் உங்கள் முகம் பளிங்கு போல ஜொலிக்கும்.

கற்றாழை சாற்றை மோரில் கலந்து குடித்தது வந்தாலே உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அரிப்பு மற்றும் முகத்தில் ஏற்படும் கருந்திட்டுகள் மறைந்து விடும்.

பாத எரிச்சல் மற்றும் பாத வெடிப்பு உள்ளவர்கள் இரவு படுக்குமுன் கற்றாழையின் நுங்கு பாகத்தினை பாதத்தின் அடியில் தடவிக் கொண்டு படுத்தால் இந்த நோய் குணமாகும்.

தழும்புகள், முகத்திலுள்ள கரும்புள்ளிகள், உலர்ந்த சருமம் என சரும நோய்கள் எதுவாக இருந்தாலும், சிறிது கற்றாழை சாற்றை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும். இதனை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவி வேண்டும். அப்போது முகம் பொலிவு பெறும்.

இன்றைய அனைத்து அழகு சாதன பொருட்களின் தயாரிப்பிலும் தவறாது இடம் பெறுவது சோற்று கற்றாழை. இது சருமத்தின் ஈரப்பதத்தை சமன் செய்வதுடன் சரும நோய்களையும் குணப்படுத்துகிறது.