தோனியின் பிறந்த நாளை கொண்டாடும் ரசிகர்கள்

4
4

ந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டனும்,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கப்டனுமான தல தோனியின் 39வது பிறந்தநாள் இன்று. இதையொட்டி, Happy Birthday Dhoni  என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி வருகிறது.

சாதாரண குடும்பத்தில் பிறந்து கிரிக்கெட் உலகின் உச்சத்தை அடைந்து,  இந்திய அணியின் சாதனை நாயகனாக திகழ்ந்து வரும் தோனியின் 39வது பிறந்த நாள் இன்று. இதையொட்டி அவருக்கு ரசிகர்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மகேந்திர சிங் தோனி 1981ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி ராஞ்சியில் பிறந்தவர்  மகேந்திர சிங் தோனி,  தொடக்க காலத்தில் இந்திய ரயில்வே வாரியத்தில் டிடிஆராக பணியாற்றி வந்தார்.  கிரிக்கெட் மீது உள்ள ஆர்வம் காரணமாக பல்வேறு போட்டிகளில் விளையாடி, இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை நாயகனாக திகழ்ந்து வருகிறார்.   இந்தியாவுக்கு உலக கோப்பையும் பெற்று தந்து வரலாற்றில் இடம்பிடித்தார்.

வெற்றி தோல்வி என இரண்டையுமே சரியாக கையாளத் தெரிந்தவர் என்பதே தோனியின் தனிச்சிறப்பு. இதன் மூலம்  இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை லாவகமாக கையாண்டு, சக வீரர்களுக்கு உரிய மரியாதையும் வாய்ப்பையும் வழங்கிய தோனி, கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளையும் புரிந்துள்ளார்.

கிரிக்கெட்டின் 3 உலகக் கோப்பைகளையும் பெற்றுத் தந்த ஒரே கேப்டன் தோனி, தனது இயல்பான சுபாவத்தால் ‘கூல் கேப்டன்’ என அழைப்பட்டவர்.

தோனியை பெருமைப்படுத்தும் விதத்தில் அவருடைய பிறந்தநாளுகாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீடியோ வெளியிட்டு சிறப்பாக கொண்டாடியுள்ளது.

இன்று அவரது ரசிகர்கள் ஹேப்பி பர்த்டே தோனி Happy Birthday Dhoni என ஹேஸ் டேக் உருவாக்கியுள்ளனர். அது சமூக ஊடகங்களில் டிரெண்டிங் ஆகிவருகிறது.

எம்.எஸ்.தோனியின் பிறந்தநாள் பரிசாக மேற்கிந்திய தீவுகள் அணியின் டுவைன் பிராவோ எழுதிய பாடல் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகிறது.