சற்று முன்
Home / தேசத்தின்குரல் / அறிவாயுதம் / சுன்னாகத் தண்ணீரில் கலந்த மாசு – ஐங்கரநேசன் சொன்ன ரகசியம்.

சுன்னாகத் தண்ணீரில் கலந்த மாசு – ஐங்கரநேசன் சொன்ன ரகசியம்.

சுன்னாகத்தில் தற்பொழுது நிலவிவருகின்ற
குடிநீர் பிரச்சனை தொடர்பில் வடமாகாண முன்னாள் அமைச்சரும் பசுமை இயக்கத்தின் தலைவருமான ஐங்கரநேசன் விளக்கமளித்துள்ளார்.

தமிழ்க்குரலின் அறிவாயுதம் நிகழ்ச்சிக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர் வடமாகாண முதலமைச்சரோ அல்லது தானோ சுன்னாகத்தில் உள்ள தண்ணீரில் மாசுஇல்லை என கூறவில்லையெனவும்

அவ்வாறு தாம் கூறியதாக வரும் செய்திகளில் எதுவித உண்மையும் இல்லை என தெரிவித்துள்ள அவர்
இந்த சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரின் கீழ் நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட நிலையில்,

அந்த குழுவினரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சுன்னாகத்தில் உள்ள நீரிலே ஆபத்தான மாசுக்கள் எதுவும் இல்லை என குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், அதேவேளைநிபுணர் குழுவினரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை ஊடகங்களுக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றில் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ள அவர் சுன்னாகத்தில் தண்ணீரில் எண்ணெய்கலந்ததை விட அரசியல் மாசு அதிகம் கலந்திருப்பதாவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

தமிழ்த்தேசிய இயக்கத்தின் தலைவர் பொ ஐங்கரநேசன் தமிழ்க்குரலுக்கு வழங்கிய நேர்காணலின் முழுமையான ஒளி வடிவம் உங்கள் பார்வைக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கூட்டமைப்பின் தலைவராவதற்குரிய தகுதி சேனாதிராஜாவிற்கு உண்டு – சி.வி.கே தெரிவிப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் ஒதுங்கியிருக்கும் பட்சத்தில் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக மாவை ...