இன்றைய நாள் உங்களுக்கு எப்படி (19.19.2020)

0 4
0 4

மேஷம்

கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். வேற்று மதத்தவரிடமிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்துப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். எதிர்பாராத நண்பர்களின் சந்திப்பு நிகழும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

மிதுனம்

மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

கடகம்

சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பணப்பற்றாக் குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

சிம்மம்

குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உறவினர்கள் வீடு தேடிவருவார்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிக்கு மிக நெருக்கமாவீர்கள். சாதிக்கும் நாள்.

கன்னி

கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சி கிட்டும் நாள்.

துலாம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். எதிலும் பொறுமை தேவை. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்

கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. முக்கிய கோப்புகளை கையாளும் போது கவனம் தேவை. சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள்.

தனுசு

எந்த விஷயத்தையும் சாமர்த்தியமாக கையாளுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் புது தொழில் முயற்சிகள் வெற்றியடையும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பாராட்டு கிடைக்கும். இனிமையான நாள்.

மகரம்

உங்கள் செயல்களில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில உதவிகளைச் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கும்பம்

வீண் கோபத்தை தவிர்ப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். பணப்பற்றாக் குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.

மீனம்

சந்திராஷ்டமம் தொடர்வதால் முன்கோபத்தை குறையுங்கள். வருங்காலத்தைப் பற்றி அதிகமாக யோசிப்பீர்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடிக்க முயற்சி செய்வீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.