செம்பருத்தியின் அற்புத குணங்கள்!

istockphoto 158153723 612x612 300x200
istockphoto 158153723 612x612 300x200

செம்பருத்தி இலைகளில் இருந்து எடுக்கப்பட்ட தேநீர் பலராலும் அதன் மருத்துவ குணத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில்சிறுநீரகத்தின் பிரச்னைகளின் போது, இயற்கையான முறையில் அதனை சரி செய்ய இனிப்பு இல்லாமல் இந்த செம்பருத்தி தேநீரை பருக வேண்டும்.

இலைகள் மற்றும் பூவின் இதழ்களை அரைத்து செய்யப்பட்ட கலவை முடி உதிர்வதை தடுப்பதற்கான இயற்றையான பொருளாக உள்ளது.

செம்பருத்தி இலை தேநீரை பருகும் பலருக்கும், உயர் இரத்த அழுத்த அளவை குறைத்துள்ளது தெரிய வந்துள்ளது. எனவே, இரத்த அழுத்தத்தை குறைப்பதற்காக தொடர்ச்சியாக சாப்பிட வேண்டிய மருந்தாக செம்பருத்தி இலை உள்ளது.

இச்செடியின் வேறுடன் ஆடா தோடை இலை சேர்த்து கொதிக்க வைத்து கொடுக்க இருமல் தீரும்.

மலராத மொட்டுக்களை உலர்த்தி இடித்து தூள் வைத்துக் கொண்டு தண்ணீரில் கலக்கி சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் நீங்கும். நெய்யில் சாப்பிட ஆண்மை பெருகும்.