பாத வெடிப்பு குணமாக வீட்டு வைத்தியம்

download 21
download 21

உடலின் அழகை பராமரிக்க நாம் பல முயற்சிகளை மேற்கொள்கிறோம்.

ஆனால், அந்த அளவு பராமரிப்பு பாதவெடிப்பிற்கு வழங்குவதில்லை. ஏனெனில் கால்களில் இருப்பதால், அது வெளியில் தெரியாது என்று நினைக்கிறோம். உண்மையில் பாத வெடிப்பு மிகவும் ஆபத்தானது. அதை சரி செய்ய இயற்கை மருந்துகள் பற்றி பார்க்கலாம்.

மருதாணி இலை

மருதாணி இலையுடன் மஞ்சளை பொடியாக்கி அம்மி வைத்து அரைக்கவும். இரவு நேரங்களில் உறங்க செல்வதற்கு முன்பு பாதங்களை வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்து வெடிப்பு இருக்கும் இடங்களில் பற்று போடுங்கள். அவை காய்ந்ததும் சுத்தமாக கழுவி எடுங்கள். வராத்திற்கு இருமுறை மட்டும் செய்தாலே போதும்.

எலிமிச்சைச்சாறு

அகலமான பாத்திரத்தில் பொறுக்கும் சூட்டில் வெந்நீருடன் எலுமிச்சைச் சாறை கலந்து 15 நிமிடங்கள் பாதங்களை வைத்திருந்து பீர்க்கன் நாரைக் கொண்டு தேய்க்கவும். பாதங்களில் உள்ள அழுக்குகள், வெடிப்புகள் நீங்கி பாதம் பொலிவாக அழகாக இருக்கும். தினமும் இப்படி செய்தால் பாதத்தில் இருக்கும் கெட்ட செல்கள் நீங்கி பாதம் பளிச்சென்று இருக்கும்.

மஞ்சள்தூள்

மஞ்சள் சிறந்த கிருமிநாசினி என்பதை அறிவோம். அதிகப்படியான வெடிப்புகளை நீக்க கிழங்கு மஞ்சளைப் பொடியாக்கி சுத்தமான நல்லெண்ணெயில் குழைத்து வெடிப்பு இருக்கும் இடங்களில் தடவி வந்தால் எரிச்சலும், வலியும் குறைவதோடு நாளடைவில் வெடிப்பும் மறைய தொடங்கும்.

குதிகால் உயர்காலணிகளைத் தவிர்த்து மிருதுவான காலணிகளைப் பழக்குங்கள். இதனால் வளரும் போது குதிகால் வலியைத் தவிர்க்கலாம்.