வட, கிழக்கில் 28 ஆயிரம் வீட்டுத்திட்டம்!

house
house

வடக்கு – கிழக்கில் 28 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகளை அமைக்கும் திட்டத்தை சமூக வலுவூட்டல் அமைச்சு ஆரம்பித்துள்ளது.

இதன் முதல் கட்டமாக 7 ஆயிரம் வீடுகளை அமைத்து பயனாளிகளுக்கு வழங்க திறைசேரி அனுமதியளித்துள்ளது.

12 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் பதுளையில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வீட்டுத்திட்டத்தை யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பிரதேச செயலாளர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.