வவுனியாவில் தீப்பற்றி எரிந்த வீட்டினுள் இருந்து சடலம் மீட்பு ; காவற்துறையினர் விசாரணை!

IMG 20230621 WA0001
IMG 20230621 WA0001

வவுனியா தேக்கவத்தை பகுதியில் இன்று (21.06) அதிகாலை தீப்பற்றி எரிந்த வீட்டினுள் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த வீடு தீப்பற்றி எரிவதை கண்ட அயவலர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.

 
இதனையடுத்து வீட்டிற்குள் சென்ற போது  குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.


இச் சம்பவம் தொடர்பில் வவுனியா காவற்துறையினருக்கு வழங்கிய தகவலையடுத்து, மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் முன்னெடுத்து வருவதுடன், தடவியல் காவற்துறையினரின் உதவியையும் நாடியுள்ளனர்