மல்லாவியில் விபத்தில் இளைஞர் ஒருவர் பலி!

1687743633 accident 2
1687743633 accident 2

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பகுதியில் இடம்பெற்ற வாகனம் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

நேற்று மதியம் (25 ) இடம்பெற்ற இந்த விபத்தில் வவுனியா தேக்கவத்தை பகுதியை சேர்ந்த கமலதாஸ் கபில்தாஸ் (25) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளதுடன் , மல்லாவி திருநகர் பகுதியை சேர்ந்த கமலநாதன் சபேசன் என்ற இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மல்லாவி ஆதார வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் .

முல்லைத்தீவு – மல்லாவி பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளுடன் சிறிய ரக வாகனம் ஒன்று மோதியே குறித்த விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது இரண்டு வாகனங்களும் தீப்பற்றி எரிந்துள்ளதாகவும் அதில் மோட்டார் சைக்கிள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பில் கிளிநொச்சி தடயவியல் காவற்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், மேலதிக விசாரணைகளை மல்லாவி காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.