மட்டக்களப்பில் அரசாங்க நிர்ணய விலையில் நெல் கொள்வனவு!

rice
rice

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அரசாங்கத்தின் நிர்ணய விலையில் நெல் கொள்வனவு செய்யும் பணி முதலில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தும் சபை அறிவித்துள்ளது.

பின்னர் அறுவடைக்கு ஏற்ற வகையில் ஏனைய மாவட்டங்களில் நெல் கொள்வனவை மேற்கொள்ள சபை தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு கிலோகிராம் உலர்ந்த நெல்லை 50 ரூபாவிற்கும், ஒரு கிலோகிராம் ஈரலிப்பான நெல்லை 45 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

விவசாயிகளை அசௌகரியங்களுக்கு உட்படுத்தாத வகையில் நெல் கொள்வனவை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் நெல் சந்தைப்படுத்தும் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கொள்வனவு செய்யப்படும் நெல்லை களஞ்சியப்படுத்துவதற்கு அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தாமதமின்றி விவசாயிகளுக்கு பணம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் நிர்ணய விலையை காட்டிலும் குறைந்த விலைக்கு தனியாருக்கு நெல்லை விற்பனை செய்ய வேண்டாமென்றும் நெல் சந்தைப்படுத்தும் சபையின் தலைவர் ஜெ.டி மானப்பெரும விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.