திரைத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியமைக்கான கலைமாமணி விருது தமிழக அரசினால் நடிகர் விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
2017ம் ஆண்டிற்கான விருது பட்டியலில் இடம்பிடித்திருந்த நடிகர் விஜய் சேதுபதி கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பங்கேற்காமையினால் அவரிற்கு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் விஜய் சேதுபதிக்கான கலைமாமணி விருதினை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மாபா.பாண்டியராஜன் வழங்கியுள்ளார்.
அதேபோல், பாடலாசிரியர் யுகபாரதிக்கும் தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது.