பிறந்து 45 நாட்களேயான ஆண் குழந்தை கொரோனாத் தொற்றால் பரிதாபப் பலி!

baby leg
baby leg

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 45 நாட்களேயான பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு லேடி ரிட்ஜ்வே தேசிய சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த குழந்தை உயிரிழந்துள்ளது.

நியூமோனியாக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையிலே வைத்தியசாலையில் குறித்த குழந்தை சேர்க்கப்பட்டது எனவும், உயிரிழந்துள்ள குறித்த குழந்தைக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

குழந்தையின் உடல் இன்று மாலை பொரளை மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக கடந்த 8ஆம் திகதி பிறந்து 20 நாட்ளான ஆண் சிசு இதே வைத்தியசாலையில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.