இனப்பிரச்சினை என்று கூறி கொண்டு தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் இலாபம் தேடி கொள்கிறார்கள் – காமினி லொகுகே

z p01 MP Gamini
z p01 MP Gamini

இனப்பிரச்சினை என்று கூறி கொண்டு தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள் என போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதில் வழங்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் காமினி லொகுகே மேலும் கூறியுள்ளதாவது,

தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று கூறிக் கொள்பவர்கள் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

நாட்டில் இனப்பிரச்சினை என்பதொன்று கிடையாது. 2009ஆம் ஆண்டுடன் இனப்பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் இனப்பிரச்சினை என்று கூறிக் கொண்டு தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.