நீதிமன்ற உத்தரவுடன் படையினரால் ஆட்லறி குண்டுகள் மீட்பு; ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு!

20150929184415 law and justice patent
20150929184415 law and justice patent

முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி தேசிய பாடசாலையில் கடந்த 25 ஆம் திகதி மைதான துப்பரவு பணியின் போது வெடிபொருட்கள் இனம் காணப்பட்டுள்ளன.

இன்னிலையில் குறித்த மோட்டார் குண்டுகள் மேலும் நிலத்தில் புதையுண்டு காணப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக அவற்றை தோண்டும் நடவடிக்கையில் முல்லைத்தீவு மாவட்ட படையினர் 28.01.2021 அன்று காவல்துறை படையினர் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கனரக இயந்திரம் கொண்டு தோண்டப்பட்ட போது வெடிக்காத நிலையில் அதிகளவான மோட்டார் குண்டுகள் நூற்றுக்கணக்கில் மீட்கப்பட்டுள்ளது.

இதனை செய்தி சேகரிப்பாதற்காக முள்ளியவளை காவல்துறை நிலைய அதிகாரியின் அனுமதி பெற சென்ற உடகவியலாளர்களுக்கு படையினர் அனுமதிமறுத்துள்ளார்கள் படங்கள் எதுவும் வெளிவரக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார்கள்.