நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 77,184 ஆக அதிகரிப்பு!

b22212ed images
b22212ed images

இலங்கையில் மேலும் 403 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 756 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 77,184 ஆக அதிகரித்துள்ளது.