தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதில் இந்தியா காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும் – கஜேந்திரகுமார்

gajendrakumar 768x461 1
gajendrakumar 768x461 1

தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதில் இந்தியா காத்திரமான பங்களிப்பை வழங்கவேண்டும் என இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேயயுடனான இன்றைய சந்திப்பின்போது வலியுறுத்ததப்பட்டதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச விசாரணையை இந்தியா வலியுறுத்தவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தை மதிக்கிறோம். ஆனால் அதன்வழியான 13 ம் திருத்தச்சட்டமூலத்தை தீர்வாக ஏற்க முடியாது . தமிழர் தேசத்தை அங்கீகரிக்கும் தீர்வை தொடர்ந்தும் வலியுறுத்துவோம். இந்திய பாதுகாப்பு நலன்களுக்கு தமிழர் தேசம் ஒரு கவசமாகவே இருக்கும். நாம் இந்திய நலன்களுக்கு எதிரானவர்கள் அல்ல. பூகோள் அரசியல் போட்டியின் பகடைகளாக இலங்கையின் வடகிழக்கு பகுதியை இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கு வழங்குவதை நாம் எதிர்க்கிறோம். இதனால் பாதிக்கப்படப்போவது எமது மக்களே

தமிழர் மீதான இனப்படுகொலைக்கான பொறுப்புகூறலை வலியுறுத்துவதில் இந்தியா காத்திரமான பங்கை வகிக்க வேண்டும். சர்வதேச விசாரணையை இந்தியா வலியுறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.