இந்தியாவின் அழுத்தம் காரணமாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு முயற்சிக்கிறது – ராஜித

rajitha
rajitha

இந்தியாவின் அழுத்தம் காரணமாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு முயற்சிக்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன், இவ்வாறான செயற்பாடுகளால் நாட்டின் இறையாண்மை மற்றும் தனித்துவமே பாதிக்கப்படும் என ராஜித சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அதிகாரப் பகிர்வு குறித்து தற்போதைய அரசாங்கமே பரவலாகக் கருத்துக்களைத் தெரிவித்த நிலையில், அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவரப் பாடுபட்ட தேரர்கள் மாகாணசபை முறைமையை முற்றாக எதிர்க்கின்றனர் .

அத்துடன், கூட்டாட்சி என்ற சொல்லைக்கூட விரும்பாத இந்த அரசாங்கம் இப்போது இலங்கைக்குள் சீனாவின் இராச்சியத்தைத் தோற்றுவிக்க முயற்சிக்கின்றது.

இந்நிலையில், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் எம்முடன் வாழ்கின்ற மக்களுக்கு தமிழீழத்தைத் தர முடியாதெனக் கூறியவர்களே தற்போது சீன ஈழத்திற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.