சவால்களை வெற்றிகொள்ள அனைத்து தரப்பினரும் ஒன்றுபட வேண்டும் – ஜயந்த சமரவீர

4444
4444

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை விட இஸ்லாமிய அடிப்படைவாதம் பாரதூரமானது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்கவே 69 இலட்சம் மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். ஆகவே, இவ்விடயத்தில் அரசு பொறுப்புடன் செயற்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் கப்பல் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான ஜயந்த சமரவீர தெரிவித்தார்.

ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற காலத்தில் இருந்து மே தினக் கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்த முடியாத துரதிஷ்ட நிலை ஏற்பட்டது.

இம்முறை மே தினக் கூட்டத்தை வெகுவிமர்சையாக நடத்தத் திட்டமிட்டிருந்தோம். புத்தாண்டு கொரோனாக் கொத்தணியின் காரணமாக உழைக்கும் வரக்கத்தினரை ஒன்றினைத்து கூட்டங்களை நடத்த முடியாத நிலை தோற்றம் பெற்றுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் ஒரு நாடு – ஒரு சட்டம், அனைவருக்கும் சமவுரிமை என்ற இலக்குக்கு அமைய இம்முறை சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடியது.

நாட்டு மக்கள் அனைவரும் பொதுச் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும். பொதுச் சட்டத்துக்குப் புறம்பாக ஒரு தரப்பினர் செயற்படும்போது முரண்பாடுகள் மாத்திரம் தோற்றம் பெறும்.

தமிழ்ப் பிரிவினைவாதம் நாட்டின் அரசமைப்புக்கு முரணாகச் செயற்பட்டதாலேயே பாரிய விளைவுகள் நாட்டில் ஏற்பட்டன.

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த உழைக்கும் வர்க்கத்தினர் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இன்று பல்வேறு சவால்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் தோற்றம் பெற்றுள்ளன. சவால்களை வெற்றிகொள்ள அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட வேண்டும் என தெரிவித்துள்ளார்.