உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதியுடன் சஜித் சந்திப்பு!

sajith 1
sajith 1

உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பதில் பிரதிநிதி மருத்துவர் ஒலிவியா நிவேராஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கிடையில் இன்று முக்கிய சந்திப்பு நடைபெற்றது.

sajith 2

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

உலகம் எதிர்கொண்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நிலை மற்றும் இலங்கையின் சவால்கள் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டன என்று எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா நெருக்கடியைச் சமாளிப்பதற்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குமாறு உலக சுகாதார ஸ்தாபனத்தின் பதில் பிரதிநிதியிடம் சஜித் பிரேமதாஸ இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

sajith 3

கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து வகையான ஒத்துழைப்புகளையும் வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை தயாராக இருக்கின்றன என்று ஒலிவியா நிவேராஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் விசேட மருத்துவ நிபுணர்களான பேராசிரியர் நாலிகா குணவர்தன, மருத்துவர் பாலித அபேகோன் மற்றும் மருத்துவர் பத்மலால் டி சில்வா ஆகியயோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

இதேநேரம், நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவருடன் இணையவழியில் கலந்துரையாடி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.