பராமரிப்பற்ற நிலையில் கரைச்சிப் பிரதேச மலசலகூடம்!

S3650001 1
S3650001 1

கிளிநொச்சி பிரதேச சபை வளாகத்தில் உள்ள பொது மக்கள் பயன்படுத்தும் மலசலகூட சுகாதார சீர்கேடு தொடர்பில், பொது மக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.

அரசாங்கத்தின் பல மில்லியன் ரூபா செலவில் பெதுமக்களுக்காக அமைக்கப்பட்ட குறித்த பொது மலசல கூடம் தற்போது அசுத்தமான நிலையில் சுத்தம் செய்யப்படாது கைவிடப்பட்டது போன்று காணப்படுகிறது

மலம் ,சலம் கழிக்க செல்கின்ற பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையில் குறித்த மலசல கூடம் துர்நாற்றம் வீசுவதை காணக் கூடியதாக உள்ளது

மேலும் ஆண்கள், பெண்கள்  பாவிப்பதற்காக தனி தனியாக எந்த பலகைகள் இல்லாமையால் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை அன்றாடம் சந்திக்கின்றனர்

குறிப்பாக மலசல கூட வாசலில் தகரங்கள் கிடப்பதால் இரவில் மலசல கூடத்தை பாவிக்கும் பொது மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்

இது தொடர்பாக கிளிநொச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் பார்வைக்கு தமிழ்க்குரல் நிர்வாகம் கொண்டு சென்ற போதும் தவிசாளர் இப்போது கலந்துரையாடல் ஒன்றில் இருப்பதால் சந்திக்க முடியாதென்று நமக்கு தெரிவிக்கப்பட்டது.

எனவே பயன்பாட்டில் உள்ள மலசலக் கூடத்தை சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு ஏற்றவகையில் வைத்திருக்க கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறித்த விடயம் தொடர்பில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

தமிழ் தேசிய  கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை குறித்த பிரச்சனை தொடர்பாக கூட கவனம் செலுத்தவில்லை என்றால் எவ்வாறு மக்களுக்கு சேவையாற்ற போகிறார்கள் என்பது கேள்வி குறியாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்