வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துவதில் எவ்விதமான சிக்கல்களும் இல்லை-அஜித் நிவாட் கப்ரால்

Ajith Nivard cabraal
Ajith Nivard cabraal

வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துவதில் எவ்விதமான சிக்கல்களும் இல்லை என்று நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியைப் பொறுப்பேற்று ஆட்சி அமைத்தவுடன் அரசாங்கத்தினால் நிலுவையில் உள்ள கடன்தொகையில் 2020ஆம் ஆண்டுக்கான தொகையை மீளச் செலுத்த முடியாது என்று பிரசாரம் செய்தன. ஆனால் அவ்விதமான எந்த நிகழ்வுகளும் நடைபெற்றிருக்கவில்லை. அரசாங்கம் உரிய காலப்பகுதியில் அக்கடன்தொகைகளை செலுத்தியிருந்தன.

தற்போது, நாணயத்தாள்களை அச்சிட்டதன் காரணத்தினால் இந்த ஆண்டின் அடுத்துவரும் காலப்பகுதியில் உள்ள கடன் தொகைகளை செலுத்த முடியாது என்று பிரசாரம் செய்கின்றன. ஆனால் அவ்விதமான நெருக்கடியான நிலைமைகள் எவையும் காணப்படவில்லை. கொரோனா வைரஸ் பரவல் காலத்திலும் நிதிமுகாமைத்துவம் முறையாகவே பேணப்பட்டது. அதேபோன்று, தற்போதும் அந்தச் செயற்பாடுகள் அனைத்தும் முறையாகவே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

ஆகவே,  அரசாங்கம் உரிய காலப்பகுதியில் கடன் தொகைகளை முறையாகச் செலுத்தும். அப்போது எதிர்க்கட்சிகள் எவ்விதமான காரணங்களைக் கூறி பிரசாரம் செய்யப்போகின்றன? என்றார்.