ரிஷாட்டின் மைத்துனரால் 29 வயதான மற்றுமொரு பணிப்பெண் துஷ்பிரயோகம்!

download 6 1
download 6 1

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றிய 29 வயதான மற்றுமொரு பணிப்பெண்ணையும், ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி இருப்பதாக தெரியவந்துள்ளது.

ரிஷாட்டின் இல்லத்தில் பணியாளாக இருந்து தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமி ஹிஷாலினி தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் குழுவிடம், குறித்த 29 வயதான பெண் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதன் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்திருப்பதாக, சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

இதனை அடுத்து காவல்துறைக் குழு ஒன்று இன்று ரிஷாட்டின் இல்லத்துக்கு மீண்டும் சென்று வாக்குமூலம் பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.