அரசியல் கைதிகளின் கோரிக்கையை அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும்- இராதாகிருஷ்ணன்

Rathakrishnan
Rathakrishnan

அநுராதபுர சிறைச்சாலை சம்பவம் இலங்கைக்கு அவ பெயரை ஏற்படுத்தும் செயலாகும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஆகவே, இந்த விடயத்தில் அரசாங்கம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் வேலுசாமி இராதாகிருஷ்ணன் மேலும் கூறியுள்ளதாவது, “அரசியல் கைதிகள் தொடர்பாக தீர்மானம் ஒன்றை எடுக்கும் வகையில் ஜனாதிபதி ஆலோசனை குழுவை நியமித்து அவர்களின் பரிந்துரைகளை கோரியுள்ளார்.

இந்நிலையில் நடைபெற்ற இந்த சம்பவம் அரசியல் கைதிகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி இருப்பதோடு, அவர்களின் விடயம் தொடர்பாக அரசாங்கம் அரசியல் காய் நகர்த்தலையே செய்கின்றது.

ஆகவே, குறித்த விடயத்தில் அரசாங்கம், அநுராதபுர சிறைச்சாலைகளிலிருந்து யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும் என்ற அரசியல் கைதிகளின் கோரிக்கையை உடனடியாக பரிசீலனை செய்து அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.