நான் முன்பை விட ஆளுமையுடன் மீண்டும் வருவேன் – மனோ

mano
mano

நான் முன்பை விட ஆளுமையுடன் ,பலத்துடன், கோபத்துடன் மீண்டும் வருவேன் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

அவருடைய முகநூல் பதிவிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். தடுப்பூசி வழங்குதல் என்பதை தடுப்ழுசி லழுங்குதல் என மொழிப்பிழையாக கொரோனா தடுப்பூசி வழங்கும் நிலையம் ஒன்றில் எழுதியுள்ளது என்பதை சுட்டிக்காட்டும் போதே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

என் காலத்தில் பேராசிரியர் சந்திரசேகரனை “அரச கரும மொழிகள் ஆணைக்குழு” தலைவராக நியமித்து, அங்கே ஒரு தொடர்பாடல் நிலையத்தையும் அமைத்திருந்தேன்.

மொழிப்பிழைகள் என் கவனத்துக்கு வந்த உடன் ஓடியோடி திருத்தங்கள் செய்யப்பட்டன. அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக, நாட்டில் எந்த மூலையில் மொழிப்பிழை நடந்தாலும்,முதல் பொறுப்பு கூற வேண்டிய அந்த ஊர் நாடாளுமன்ற உறுப்பினரை விட்டு விட்டு நாடாளுமன்றத்திலும், ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும், மேடைகளிலும், பதில் சொல்லவும், ஏச்சு-பேச்சு வாங்கவும் ஒரு “அப்பாவி” அமைச்சர் இருந்தார். வெயில் நன்றாக அடிக்க, அடிக்கத்தான் நிழலின் அருமை தெரியும். அடிக்கட்டும்.! தெரியட்டும்.! எழுதி வைத்துக்கொள்ளுங்கள் நான் மீண்டும் வருவேன் என தெரிவித்துள்ளார்.