இந்திய, சீன, அமெரிக்க காலனித்துவ நாடாக இலங்கை – அநுரகுமார திஸாநாயக்க

anura 1
anura 1

நாட்டில் இடம்பெற்ற பல்வேறு ஊழல், மோசடிகள் தொடர்பாக கடந்த காலங்களில் தகவல்களை வெளிப்படுத்திய போதும் ஆட்சியாளர்கள் உரிய விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவதானம் செலுத்தாமல் அதனை திசை திருப்பும் வகையிலேயே அன்று ஆட்சியாளர்கள் செயற்பட்டார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

சர்வதேச ரீதியில் இத்தகைய ஆவணங்கள் வெளியாகும்போது, அதில் இலங்கை அரசியல் தலைவர்களின் பெயர் உள்ளடங்கியிருப்பது வழக்கமானதாக மாறியிருக்கின்றது என்றும் தெரிவித்தார்.

நிரூபமா ராஜபக்ஷ தமது உறவினர் என்பதால் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் இதுகுறித்து எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என்றும் அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.