கூட்டு ஒப்பந்தம் ஒன்று இருக்குமாயின் அது மிகவும் நல்லதாகும் – நிமல்

9ce1429043c18d420cb7bc3b227e8fad XL
9ce1429043c18d420cb7bc3b227e8fad XL

பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களின் பலவீனம் காரணமாகவே கூட்டு ஒப்பந்தத்திற்கு செல்ல முடியாமல் போனதாகத் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கத்தினர் முரண்பட்டு, பிளவடைந்து இருக்கின்றபோது அதன் இலாபத்தை முதலாளிமார்கள் பெறுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கூட்டு ஒப்பந்தத்திற்கு செல்லுமாறு அழுத்தம் கொடுக்க அமைச்சருக்கு அதிகாரமில்லை.

முதலாளிமார் சம்மேளனத்திற்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையே 12 தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

முதலாளிமார்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கின்றனர். ஆனால் தொழிற்சங்கங்கள் பிளவடைந்துள்ளன.

இன்று தொழிற்சங்கங்களுக்கு தங்களது பலத்தை வெளிப்படுத்தக்கூடிய நிலைமை இல்லை.

தொழிலாளர்களின் உரிமைகளைச் சட்டத்தில் பாதுகாக்கக்கூடிய எல்லை ஒன்றுள்ளது.

ஏனையவற்றைப் பெற்றுக்கொள்ள தொழிற்சங்கங்கள் பலமாக இருக்க வேண்டும்.

தொழிற்சங்கத்தினர் முரண்பட்டு, பிளவடைந்து இருக்கின்றபோது அதன் நன்மையை முதலாளிமார்கள் பெறுகின்றனர்.

கூட்டு ஒப்பந்தம் ஒன்று இருக்குமாயின் அது மிகவும் நல்லதாகும்.

எனினும், தொழிற்சங்கங்களுக்கு இடையிலான பிளவு காரணமாக அதனைச் செய்ய முடியாமல் போனதாகத் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.