நாட்டை கட்டியெழுப்ப ஐக்கிய தேசிய கட்சி தயாராக இருக்கிறது – ரணில்

1

நாட்டை கட்டியெழுப்ப ஐக்கிய தேசிய கட்சி தயாராக இருக்கின்றது என ஐக்கிய தேசிய கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களை மேம்படுத்தும் வேலைத்திட்டம் நேற்று (20 ) மாலை கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாங்கள் நாடாளுமன்ற தேர்தலுக்கு சென்றோம். அதில் எமது கொள்கையை முன் வைத்தோம். ஏனையவர்களைப்போன்று வாக்குறுதிகளை வழங்கவில்லை. கொவிட் தொற்று தொடர்பாக குறிப்பிட்டோம். உலக பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என தெரிவித்தாேம்.

அதற்கு முகம் கொடுக்கவேண்டி வேலைத்திட்டங்களை தெரிவித்தோம். ஆனால் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளாமல் எங்களை நிராகரித்தனர். ஆனால் அன்று நாங்கள் தெரிவித்த விடயங்கள் சரி என தற்போது மக்கள் உணருகின்றனர். அதனால் நாளைய தினமும் நாட்டை கட்டியெழுப்ப முடியுமாக இருப்பது ஐக்கிய தேசிய கட்சிக்கு மாத்திரமாகும். அதற்கான கொள்கையும் வேலைத்திட்டமும் எங்களிடமே இருக்கின்றது.

அதனால் அடுத்துவரும் 20 வருடங்களில் நாட்டை ஆப்கானிஸ்தானுக்கு அடுத்த படியாக கொண்டுசெல்வதா அல்லது

ஜப்பானுக்கு அடுத்த இடத்துக்கு கொண்டுசெல்வதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்றார்.