இனிவரும் காலங்கள் கடினமானதாக அமையும் – வாசுதேவ

vasutheva nanayakara
vasutheva nanayakara

இனி வரும் காலங்கள் கடினமானதாக அமையும் என நீர்வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

புறக்கோட்டையில் உள்ள சொலிஸ் விடுதியில் (29 ) இடம்பெற்ற ‘மக்கள் பேரவை’ மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நெருக்கடியான காலக்கட்டத்தின் போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒன்றினைந்தோம்.நல்லாட்சி அரசாங்கத்தினால் ஏற்பட்ட சவால்களை எதிர்க் கொள்ள வேண்டியது.

பின்னர் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகள்,தீர்மானங்கள் பாரிய பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது.

மனவேதனையுடன் உள்ள வேளையில் ஒருவருக்கொருவர் துயரங்களை பகிர்ந்துக் கொண்டோம்.பின்னர் இந்நிலையை மாற்றியமைக்க வேண்டும். என தீர்மானித்தோம்.

அனைத்து வெற்றிகளுக்கும் மத்தியில் பிறிதொரு வெற்றி தோற்றம் பெறும்.நாம் பெற்றுக் கொண்ட வெற்றிக்கு இணையாக பிறிதொரு சக்திக்கு தற்போது தோற்றம் பெற்றுள்ளது. அச்சக்தி எமக்கு பிரதான சவாலாக உள்ளது.

அரசாங்கத்தில் ஒரு தரப்பினர் தீர்மானம் எடுத்து செயற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எமது பிரச்சினைகள் மற்றும் நிலைப்பாடு தொர்பில் தொடர்ந்து வெளிப்படுத்தினோம். நாம் நினைத்தை காட்டிலும் நிலைமை பாரதூரமான தன்மையினை நோக்கி செல்வதை அறிய முடிகிறது என்றார்