அரசாங்கம் தற்போது போர்க்கொடி தூக்குவது நகைப்பிற்குரியது -ரஞ்சித் விதானகே

rancith
rancith

சீனாவிற்கு வழங்கும் போது அமைதியாக இருந்தவர்கள் தற்போது போர்க்கொடி தூக்குவது நகைப்பிற்குரியது என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார்.

நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் காரியாலயத்தில் (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

யுகதனவி மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தம் தற்போது அமெரிக்காவின் நியூபோரட் நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இயற்கை திரவ எரிவாயு திட்டத்தை செயற்படுத்தவது இந்த ஒப்பந்தத்தின் பிரதானமாக உள்ளது.கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்திற்கு எதிராக மின்சார சேவையாளர்களும் அரசியல்வாதிகளும் தற்போது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள்.

நாட்டிற்கு இயற்கை திரவ எரிவாயு திட்டத்தை கொண்டுவருவதற்கு மின்சாரத்துறை சேவை சங்கத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

நாட்டின் பிரதான தேசிய வளங்களை சீனாவிற்கு அரசாங்கம் வழங்கும் போது அமைதியாயிருந்த தொழிற்சங்கங்கள் தற்போது அமெரிக்கா என்று வரும் போது எதிர்ப்பு தெரிவிப்பது நகைப்புக்குரியது.

அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளின் செயற்திட்டங்களில் இடைத்தரகர்கள் கையூட்டல் பெற முடியாது என்பதன் காரணமாகவே இவர்கள் தொடர்ந்து சீனாவின் அபிவிருத்தி செயற்திட்டங்களை ஆதரிக்கிறார்கள் என்றார்.