பயங்கரவாத தடைச் சட்ட திருத்தச் சட்டமூலம் நாடாளுன்றில் முன்வைப்பு – ஆளுந்தரப்புக்கு சுமந்திரன் கண்டனம்

Sumanthiran 2
Sumanthiran 2

பயங்கரவாத தடைச் சட்டத்தின் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் இன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடை சட்ட திருத்த சட்டமூல விவாதத்தில் அரசாங்கத் தரப்பின் உறுப்பினர்கள் மிகக்குறைவான எண்ணிக்கையில் கலந்து கொண்டிருந்தனர்.

இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கண்டனம் தெரிவித்தார்.

மேலும் இந்த சட்ட மூலமானது நீதியமைச்சரால் முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றபோதிலும் வெளிவிவகார அமைச்சரினால் முன்வைக்கப்பட்டது.

இதன்மூலம் இந்த சட்டம் குறித்து அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கவில்லை என்பது புலனாகிறது என சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, உடனடியாக தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார எழுப்பிய வாய்மூல வினாவுக்கு பதிலளிக்கும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அஞ்சவில்லை. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலுக்கு முகங்கொடுக்க அரசாங்கம் தயாராகவுள்ளது.

உரிய நேரத்தில் தேர்தல் ஒன்று நடத்தப்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.