75 வீதத்தினால் அதிகரிக்கப்படும் மின்சார கட்டணங்கள்!

EBill large
EBill large

இலங்கையில் நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின்சாரக்கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.

இதற்கான அனுமதியை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

இதன்படி மின்சாரக் கட்டணங்கள் 75 வீதத்தினால் அதிகரிக்கப்படுகின்றன.

மின்சார சபைக்கு ஏற்பட்ட நட்டங்களை ஈடுசெய்யும் பொருட்டே இந்த கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில் இந்த கட்டண அதிகரிப்புக்கு உடன்பட்டதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, 0- 30 அலகுகளுக்கு 264 வீதமும் , 31 முதல் 60 அலகுகளுக்கு 211 வீதமும், 61 முதல் 90 அலகுகளுக்கு 125  வீதமும்,  91-120 அலகுகளுக்கு  89 வீதமும், 121 முதல் 180 அலகுகளுக்கு 79 வீதமும் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.