வவுனியாவில் பாரிய பேருந்து விபத்து – மூவர் பலி!-16 பேர் காயம்

1667612642 ACCIDENT 2
1667612642 ACCIDENT 2

வவுனியா நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

IMG 20221105 WA0024

இரவு 12.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வேகமாக சென்ற அதி சொகுசு பேரூந்து கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதுண்டு கவிழ்ந்துள்ளது.

இதன்போது பேரூந்து சாரதி மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளனர்.

இதேவேளை குறித்த பேருந்தில் பயணித்த 16 பேர் காயமடைந்த நிலையில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

IMG 20221105 WA0027

இவ் விபத்து ஏற்பட்ட சமயம் அதே திசையில் பயணித்த மற்றுமொரு சொகுசு பேருந்து சாரதி தனது பேருந்தை விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் முகமாக வீதியின் ஒரமாக செலுத்தி மற்றுமொரு பேரூந்து விபத்தை தவிர்த்திருந்தார்.

இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா மற்றும் ஓமந்தை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்