வடக்கு கிழக்கு நா. உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று!

Ranil 800x466 1
Ranil 800x466 1

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முதல் இரண்டு நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று (11) மாலை இந்த பேச்சுவார்த்தை ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய தினம் இடம்பெறவுள்ள சந்திப்பில், நல்லிணக்க பொறிமுறைகள், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், காணி விவகாரம் என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளன.

இதேவேளை, நாளை நடைபெறவுள்ள சந்திப்பில், அதிகாரப் பகிர்வு தொடர்பாக, ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது