உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவும் நகரங்களில் 2ஆவது இடத்தில் சென்னை!

Coronavirus Pandemic
Coronavirus Pandemic

உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவும் நகரங்களில் லாஸ்ஏஞ்சல்ஸ் நகருக்கு அடுத்த இடத்தில் சென்னை உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜூன் 30ஆம் திகதி சென்னையில் 2,393 பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதே நாளில், டெல்லியில் 2,199 பேருக்குத்தான் தொற்று ஏற்பட்டது.

சென்னையில் மார்ச் 9ஆம் திகதி முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் குறைவாகவே இருந்தது. ஏப்ரல் மாதத்தில் தொற்று வேகமாக பரவத் தொடங்கியது.

தற்போது, இந்தியாவின் ஏனைய நகரங்களை விடவும் சென்னையில்தான் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.

ஜூன் 30ஆம் திகதி முதல் இந்தியாவிலேயே அதிக தொற்று ஏற்படும் நகரமாக சென்னை மாறியுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக டெல்லி, தானே, புனே, மும்பை, ஹைதரபாத், பெங்ளூர், கௌகாத்தி, பால்கர், ராய்கட் நகரங்கள் உள்ளன.

உலகளவில் லாஸ்ஏஞ்சல்ஸ், சென்னை, சாண்டியாகோ, டெல்லி, சா பாலோ, தானே , மியாமி, பியூனஸ்அயர்ஸ், சல்வாடர், லிமா ஆகிய நகரங்கள் கொரோனா தொற்று அதிகம் பரவும் நகரங்களாக உள்ளன.

இந்தியாவில் ஏப்ரல் மே மாதங்களில் கொரோனா தொற்று அதிகமாக பரவும் நகரமாக மும்பை இருந்தது. ஜூன் மாதத்தில் டெல்லி அதிக தொற்றுக்குள்ள நகரமானது. தற்போது, ,சென்னை அந்த இடத்தை பிடித்துள்ளது. ஜூலை மாதத்தில் சென்னை மக்கள் கடும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகிறது.