அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நான் தொடர்ந்தும் குரல் கொடுப்பேன்-வியாழேந்திரன்

images 3
images 3

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நான் அன்று தொடக்கம் இன்றுவரை குரல் கொடுத்தவனாகவே இருந்து வருகின்றேன், அவர்களது விடுதலைக்காக தொடர்ந்தும் குரல்கொடுப்பேன் என என கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதையஅரசாங்கத்தின் கால் நடை மற்றும் சிறுபயிர் செய்கை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமண எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.


கடுக்காமுனை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், ”இப்பொழுது சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சில வாதப்பிரதிவாதங்களை அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நீதி அமைச்சரிடம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டதை கேலிகூத்தாக எடுத்து பேசி வருகின்றமையினை ஊடகங்கள் வாயிலாக எம்மால் அறிய முடிகின்றது.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதியிடம் பேசலாம், பிரதமரிடம் பேசலாம், நீதி அமைச்சரோடும் பேசவேண்டும் கைதிகளின் விடுதலை தொடர்பில் நிதி அமைச்சருக்கும் பங்கு இருக்கின்றது, அவர் நாட்டினுடைய நீதித்துறைக்கு பொறுப்பானவர்.

300க்கும் மேற்பட்ட உயிர்கள் பயங்கரவாத தாக்குதலால் கடந்த ஏப்ரல் 21 இல் வெடித்து சிதறி பலியாகினர். அந்தப் பயங்கரவாதத்தை தடுக்காமல் இருந்த அரசாங்கத்தை, மக்கள் விடுதலை முன்னணியினர் அந்நேரத்தில் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்த போது ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை பாதுகாத்த பெருமை எங்களுடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையே சாரும்.

இதேவேளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நினைத்திருந்தால் கடந்த அரசாங்கத்திடமிருந்து எமது தமிழ் மக்களுக்காக பலவிடயங்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுத்திருக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்”