ஆட்சியை கைப்பற்றினார் பொரிஸ் ஜோன்சன்

boris johnson
boris johnson

650 தொகுதிகளைக் கொண்ட பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது.

பெரும்பான்மைக்கு மொத்தம் 326 இடங்கள் தேவை என்ற நிலையில் 628 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 349 தொகுதிகளில் பழமைவாத கட்சி வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கவுள்ளது.

தொழிலாளர் கட்சி, 650 தொகுதிகளில் 202 இடங்களை மாத்திரமே பிடித்திருந்த நிலையில் தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அனைத்து தொகுதிகளுக்கான முடிவுகளும் வெளியானபின்னர், பொரிஸ் ஜோன்சன் பிரித்தானிய ராணியைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார்.