மசூதியில் நடைபெற்ற இந்து திருமணம்!

wedding
wedding

கேரள மாநிலம் செருவல்லி முஸ்லிம் ஜமாத் மசூதியில் இந்து மத சடங்குகளுடன் இந்து திருமணம் நடைபெற்றது.

மணப்பெண் அஞ்சுவின் திருமணத்தினை நடத்துவதற்கு பண வசதி இன்மையினால் தன் மகள் திருமணத்தை நடத்தி வைக்குமாறு செருவல்லி ஜமாத் கமிட்டியிடம் அஞ்சுவின் தாயார் உதவி கோரினார்.

அதனை ஏற்றுக்கொண்ட மசூதி மணமகளுக்கு 10 பவுன் தங்க நகைகளும், 2 லட்சம் பணமும் கொடுத்தது.

அத்துடன் மசூதி வளாகத்தில் இந்து முறைப்படி மாலை மாற்றப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டு சைவ விருந்தும் நடைபெற்றது.

இந்த திருமணத்துக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். திருமண புகைப்படத்தை தனது ‘முகநூல்’ பக்கத்தில் வெளியிட்டதுடன், கேரள மாநிலம் மத நல்லிணக்கத்துக்கு எப்போதும் உதாரணமாக திகழ்வதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தும் நேரத்தில் இந்த திருமணம் நடந்துள்ளதாகவும், கேரளா எப்போதும் ஒற்றுமையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.