கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 மில்லியனைக் கடந்தது

unnamed 8

சர்வதேச அளவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 இலட்சத்தைக் கடந்துள்ள நிலையில், பெருந்தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 48 இலட்சத்து 38 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

அதேநேரம் இந்த வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 470,698 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் அமெரிக்காவில், 23 இலட்சத்திற்கும் அதிகமானோர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் ஒரு இலட்சத்து 22 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பை பொறுத்தவரை அதிகபட்சமாக பிரேஸிலில் 601 பேரும் இந்தியாவில் 426 பேரும் மெக்சிகோவில் 387 பேரும் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று, நோய்த்தொற்றின் பாதிப்பை பொறுத்தவரை அமெரிக்காவில் 26ஆயிரம் பேரும் பிரேஸிலில் 16ஆயிரம் பேரும் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து, ஸ்பெயின், பெரு, இத்தாலி, சிலி, ஈரான், ஜெர்மனி, துருக்கி மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளிலும் வைரஸ் தொற்று பாதிப்பு உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.