சர்வதேச ரீதியில் 99 இலட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை…!

images 1581049389643 corona virus

இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தைக் கடந்துள்ளது.

நேற்றைய தினம் 17 ஆயிரத்து 296 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

இதற்கமைய, தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 9 ஆயிரத்து 446 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 689 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் 25 இலட்சத்து 52 ஆயிரத்து 845 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 640 ஆக அதிகரித்துள்ளது.

பிரேஸிலில் 12 இலட்சத்து 80 ஆயிரத்து 54 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ள நிலையில், 56 ஆயிரத்து 109 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவில் 6 இலட்சத்து 20 ஆயிரத்து 794 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ள நிலையில், 8 ஆயிரத்து 781 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச ரீதியில் 98 இலட்சத்து 98 ஆயிரத்து 220 பேருக்கு கொவிட்-19 தொற்றுறதியாகியுள்ளது.

4 இலட்சத்து 96 ஆயிரதது 77 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 53 இலட்சத்து 52 ஆயிரத்து 383 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.