தங்கத் தமிழ் மகனுக்கு இன்று பிறந்தநாள்!

vijay hd wallpapersimages 1080p i3rdpq 992x1323 2
wp3987280

தமிழ் திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவரும் தமிழ்நாட்டின் தங்க மகன் என கொண்டாடப்படுபவருமான தளபதி விஜய் இன்று (திங்கட்கிழமை) தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு திரையுலகில் அவர் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் சாதனைகள் குறித்த தொகுப்பினை இந்த பதிவு சுமந்து வருகிறது.

Vijay Master Movie Stills HD 4afc34c

இன்று வெற்றிமகனாக கொண்டாடப்படும் விஜய் 1984 ஆம் ஆண்டு “வெற்றி” எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது தந்தை சந்திரசேகரால் திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அவர், 1992 ஆண்டு வெளியான ‘ நாளைய தீர்ப்பு’ எனும் திரைப்படத்தின் மூலம் ஹுரோவாக அறிமுகமானார். தொடர்ந்து செந்தூரப்பாண்டி, ரசிகன், தேவா, ராஜாவின் பார்வையிலே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அந்த திரைப்படங்கள் தோல்வியை தழுவவே சினித்துறையில் விமர்சிக்கப்பட்டார்.

பல விமர்சனங்களை எதிர்கொண்ட அவர் “பூவே உனக்காக” என்ற திரைப்படத்தின் மூலம் தனது முதலாவது வெற்றியை பதிவு செய்தார்.  இதனை தொடர்ந்து வெளியான மாண்பு மிகு மாணவன், செல்வா ஆகிய திரைப்படங்கள் தோல்வியை தழுவ “காதலுக்கு மரியாதை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றுக்கொடுத்தது.

202ad2943f7093d387b570c68e30549d

தொடர்ந்து 1999 ஆண்டு வெளியான “துள்ளாத மனமும் துள்ளும்” திரைப்படம் சினிமா துறையில் அவருக்கென தனி அடையாளத்தை கொடுத்தது.  குஷி, பிரியமானவளே, ப்ரெண்ட்ஸ், பத்ரி ஆகிய திரைப்படங்களில் இரசிகர்களால் கொண்டாடப்பட்டார். தொடர்ந்து பல வெற்றிகளை பதிவு செய்த விஜய் சாஜகான், பகவதி, புதிய கீதை போன்ற திரைப்படங்கள் மூலம் மக்களை தன்வசப்படுத்திக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு வெளியான “கில்லி” திரைப்படம் மெஹாகிட் வெற்றியை கொடுக்க மக்கள் அவரை இளைய தளபதியாக்கி அழகு பார்த்தனர்.

இன்னும், வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில், கமல் கூட ரஜினி படங்களின் வசூலை நெருங்க முடியாமல் இருந்த போது, ரஜினியே ‘இந்த பையன் மட்டும் நம்ம லைன்ல அடிக்கடி கிராஸ் பண்ணிட்டே இருக்கானே’ என்று எண்ண வைத்தவர் விஜய் என்றால் அது கண்டிப்பாக மிகையாகாது.

இவ்வாறு பல சாதனைகளை படைத்த விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் வெளியீட்டுக்காக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அவமானம், அவமதிப்பு, புறக்கணிப்பு, வலி, கண்ணீர் என அத்தனையையும் பொருட்படுத்தாமல் தனது அயராத முயற்சியால் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ள விஜய்கு நாமும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.