தாமதமாகும் ‘அவதார் – 2

NTLRG 20200724235906586812

‘ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் படத்தின், 2, 3, 4 மற்றும் ஐந்தாவது பாகங்கள், 7,500 கோடி ரூபாய் செலவில் உருவாகிறது. கொரோனா காரணமாக தடைப்பட்டிருந்த படப்பிடிப்புகள், ஜூன் முதல் நியூசிலாந்தில் துவங்கியது. அவதார் இரண்டாம் பாகம், அடுத்தாண்டு டிசம்பரில் வெளியாகும் என, கூறப்பட்ட நிலையில், படத்தை திட்டமிட்டபடி முடிக்க முடியாததால், வெளியீடு தள்ளி போயுள்ளது. அவதார் இரண்டாம் பாகம், 2022 டிசம்பரிலும், மூன்றாம் பாகம், 2024 டிசம்பரிலும், நான்காம் பாகம், 2026 டிசம்பரிலும், ஐந்தாம் பாகம், 2028 டிசம்பரிலும் வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.