பிக்குகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட திருமலைத் தமிழ்க் கிராமம்!

106078135 735939016947455 8048534244908738945 o
106078135 735939016947455 8048534244908738945 o

திருகோணமலை மாவட்டம் அரிசிமலை எனும் தமிழ் பேசும் மக்களின் மீனவ கிராமம் Thilakawansa Nayake என்கிற தேரர் தலைமையிலான புத்த பிக்குகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

இந்த புத்த பிக்குகள் Asiri Kanda Purana Rajamaha Viharaya என்கிற பௌத்த வளாகத்தை அரிசிமலை கிராமத்தில் நிறுவி இருக்கிறார்கள்

குறிப்பாக 2018 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்க காலத்தில் siri Kanda Purana Rajamaha Viharaya என்கிற இந்த விகாரைக்கு 25 ஏக்கர் நிலம் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டு இருப்பதோடு . ஆலய சூழலில் உள்ள 500 ஏக்கர் வனப்பகுதி தொல்லியல் திணைக்களதிற்கு உரிய நிலப்பகுதியாக அபகரிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பகுதிகளை புத்த பிக்குகள் தவிர்ந்தவர்கள் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதோடு அதற்குரிய அறிவித்தல்கள் பல இடங்களில் வைக்கப்பட்டு இருக்கிறது இப் பகுதியெங்கும் புத்தர் சிலைகளும் சிறிய கோவில்களும் நிறுவ பட்டு இந்த பகுதி முழுமையாக பௌத்தமயமாக்கப்பட்டு வருகிறது.

-இனமொன்றின் குரல்

106078135 735939016947455 8048534244908738945 o
106078135 735939016947455 8048534244908738945 o
75540177 735938990280791 5893949489687863847 o
75540177 735938990280791 5893949489687863847 o