கடலை மாவு முகத்திற்கு தரும் அழகு ரகசியங்கள்..!

1550469060 6887
1550469060 6887

கடலை மாவு அழகு குறிப்பு: காலம் காலமாக பெண்களின் அழகை அதிகரிக்க பயன்படுத்தப்படும் அழகு பொருள் தான் கடலை மாவு.

இந்த கடலை மாவை வைத்து இயற்கையான முறையில் உடல் முழுவதும் அழகை  பெற முடியும் சரி வாங்க.

முகப்பரு சருமத்திற்கு கடலை மாவு பேசியல்:

சருமம் அழகுபெற கடலை மாவு ஃபேஸ் பேக்: சருமத்தில் உள்ள பருக்கள் நீங்க இது ஒரு சிறந்த வழி. அதாவது ஒரு பௌலில் ஒரு ஸ்பூன் கடலை மாவு மற்றும் இரண்டு ஸ்பூன் கிரீன் டீ இரண்டையும் சேர்த்து ஒரு பேஸ்ட்டு போல் கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை சருமத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும், பின்பு 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து, பின்பு சருமத்தை வெதுவெதுப்பான நீரில் சருமத்தை கழுவ வேண்டும்.

இந்த கடலை மாவு அழகு குறிப்பு (Kadalai Maavu Beauty Tips) முறையினை வாரத்தில் இரண்டு முறை செய்து வர சருமத்தில் உள்ள பருக்கள் அனைத்தும் மறைந்து விடும்.

வறண்ட சருமத்திற்கு கடலை மாவு பேசியல்:

சருமம் அழகுபெற கடலை மாவு ஃபேஸ்பேக்: சிலருக்கு சருமம் எப்பொழுதும் வறண்டு காணப்படும் அவர்களுக்கான அழகு குறிப்பு டிப்ஸ் தான் இது.

கடலை மாவை கற்றாழை ஜெல் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் நன்கு காய வைத்து, நீரில் கழுவுங்கள்.

இப்படி இந்த கடலை மாவு அழகு குறிப்பு (gram flour beauty tips) முறையினை வாரம் ஒருமுறை செய்து வந்தால், சருமம் வறட்சியடையாமல் ஈரப்பசையுடன் இருக்கும்.

கருமையான சருமத்திற்கு கடலை மாவு பேசியல்:

சருமம் அழகுபெற கடலை மாவு ஃபேஸ் பேக்(கடலை மாவு அழகு குறிப்பு): ஒரு சிறிய கிண்ணத்தில் கடலை மாவு 1 டீஸ்பூன், பப்பாளி கூழ் – 1 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் போல் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.

இந்த கடலை மாவு அழகு குறிப்பு முறையினை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், சரும கருமை நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும்.