தளபதி 64இன் படத்தலைப்பு?

vijay 64
vijay 64

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜயின் அடுத்த படம் உருவாகி வருகிறது.

கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். விஜய் சேதுபதி, சாந்தனு, அந்தோணி வர்கீஸ், ஆண்ட்ரியா, பிரகிதா, ரம்யா ஆகியோரும் உள்ளனர்.

படக்குழுவினர் உறுதிப்படுத்தாத நிலையில் படத்தின் கதை தொடர்பில் பல தகவல்கள் வெளியாகின்றன. கதை மற்றும் கதாபாத்திரத்தை ரகசியமாக படக்குழுவினர் வைத்துள்ளனர்.

தற்போது படத்துக்கு தலைப்பு தேர்வு நடந்து வருகிறது. டெல்லியில் படப்பிடிப்பை முடித்து விட்டு விஜய் சென்னை திரும்பியதும் ஜனவரி 1ம் திகதி தலைப்பையும் படத்தின் முதல் தோற்றத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்துக்கு ‘சம்பவம்’ அல்லது ‘டாக்டர்’ என்ற தலைப்பை வைக்க பரிசீலிப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகின்றன. மாணவி அனிதா பற்றிய கதை என்றால் டாக்டர் தலைப்பு வைக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.