ரஜினி பிறந்தநாளில் மீள வரும் பாட்ஷா

padshaa
padshaa

ரஜினிகாந்தின் தர்பார் படத்துக்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில் தற்போது வெளியான தகவல் அவர்களை மேலும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

1995 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் ரஜினியின் ‘பாட்ஷா’. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சமீபத்தில் நவீன வடிவில் மாற்றியமைக்கப்பட்டு மீண்டும் திரையிடப்பட்டது.

இந்நிலையில், கோவா திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் கோல்டன் ஐகான் விருது பெற்றதை வரவேற்கும் விதமாகவும், அவரது பிறந்தநாள் அடுத்த மாதம் 12 ந் திகதி கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டும் பாட்ஷா படத்தை மீண்டும் திரையிட அதன் தயாரிப்பு நிறுவனமான சத்யா மூவிஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

அதில், “டிசம்பர் 11ம் திகதி ரஜினியின் பாட்ஷா படம் உலக அளவில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் திரையிடப்பட உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.