இவற்றை கடைபிடித்தால் ரத்தம் சுத்தமாகுமா

625.0.560.350.160.300.053.800.668.160.90
625.0.560.350.160.300.053.800.668.160.90

இரத்த உற்பத்திக்கு நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர இதயத்திற்கு மிகுந்த பலதைக் கொடுப்பதுடன் உடலில் இரத்தம் அதிகமாக ஊறும் என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

தினசரி இரவு அரை டம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும் எனவும்;
பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய ரத்தம் உற்பத்தியாகும் என்பதும் முன்னோர்களின் அனுபவம் வாய்ந்த உண்மையாகும்.

செம்பருத்தி பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து ரத்தம் விருத்தியாகும்.முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும்.