காதல் ஒரு போதை மாத்திரையா? மறைந்திருக்கும் அறிவியல் உண்மைகள்

imageproxy
imageproxy

காதல் இந்த ஒற்றை வார்த்தை கொண்டிருக்கும் சக்தி அனைவரும் அறிந்ததே.

காதலின் பின்னால் காணப்படும் அறிவியல் சார்ந்த விடயங்களை பற்றிதான் ஆராயவுள்ளோம்.

ஆரம்பத்தில் காதல் எனும் உணர்வு எங்கே உருவாகின்றது? என்ற கேள்விக்கு இதயம் என்பதே அனைவரினதும் பதிலாக அமையும்.ஆனால் இது நமது மூளையில்தான் உருவாகின்றது. என கூறினால் நம்பமுடிகின்றதா?

ஆம் இதுவே உண்மை. நமது மூளைதான் இச்செயற்பாட்டை நிகழ்த்துகின்றது. இதில் ஆச்சர்யபடவேண்டிய விடயம் என்னவென்றால் போதைபொருளை ஒருவர் உபயோகப்படுத்தும் போது அவரின் மூளை எவ்வாறான விதத்தில் செயற்படுகின்றதோ அவ்வாறுதான் காதலிப்பவர்களின் மூளையும் காணப்படுமாம்.

மற்றுமொரு விஷேடம் என்னவென்றால் காதலர்கள் தமது காதலன் அல்லது காதலியை மட்டுமே விரும்பிக் கொண்டு இருக்கமாட்டார்கள், தம்மை சுற்றிக்காணப்படும் அனைத்தையுமே நேசித்து கொண்டுதான் இருப்பார்கள்.

இக்காதல் உணர்வினால் மகிழ்ச்சிமையம் தூண்டப்படும் போது பயம், வெறுப்பு என்பன குறைந்து கவலைகள் பறந்து போய்விடும்.

காதலின் போது தம்மால் எதுவும் முடியும் என நினைக்க வைப்பதும் அவ்வாறானதொரு மன நிலையினைத் தூண்டுவதற்கும் காரணமாக அமைபவையும் காதலின் சக்திகளாகும்.

எளிமையாக கூறப்போனால் காதல் ஒரு போதைமாத்திரை, காதலை நாம் காதலிக்கின்றோம்.